இந்திய விடுதலைப் போராட்டம் எங்கே, எப்போது துவங்கியது? என்று சொல்ல
யாருக்கும் துணிச்சல் இல்லை, அது வீரம் விளைந்த தமிழ்மண்ணில்தான் என்று
சொல்ல பலருக்குத் தயக்கம்! வெள்ளையர்கள் வியாபாரிகளாகத்தான் நம்நாட்டிற்கு
வந்தார்கள். பின்னர் கொள்ளையர்களாக மாறினார்கள். அதைத்தான் நாம்
எதிர்த்தோம். வந்தேறிகள் நாட்டை ஆள்பவர்களாக மாறி வரி வசூலித்தார்கள்.
எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
அதைத்தான் எதிர்த்தார்கள் தமிழ்
சிற்றரசர்களின் சிலர். அந்த எதிர்ப்புதான் போர்களாயின. அந்தப்போர்கள்தன்
இந்திய விடுதலைப் போருக்கான ஆரம்ப விதைகள். அந்த விதைகளில் பல
மறைக்கப்பட்டதுதான் கொடுமை. வீரம் விளைந்த மண்ணில் விதைக்கப்பட்டவர்களின்
வீரவரலாற்றை மறைக்க யாருக்கும் உரிமை இல்லை.