குழந்தைகளின் சொப்பு வயிறு 50 முதல் 70 கிராம் எடை வரைதான் கொள்ளும். ‘ஒரே
மாதத்தில் பிள்ளையைக் கொழுக் மொழுக் என்று ஆக்கிடறேன் பார்’ என்று அளவுக்கு
மீறி உணவைத் திணிக்காதீர்கள். சாப்பாடு ஊட்ட ஆரம்பித்ததுமே பருப்பு சாதம்,
மோர் சாதம், காய் என்று விதவிதமாகத் தரக் கூடாது.
தாய்ப்பால் ஏற்கெனவே ஐந்து மாதங்கள் குழந்தைக்குப் பழக்கப்பட்ட உணவு.
பாப்பாவுக்கு நீங்கள் புதிதாக ஊட்டிய உணவு அரிசிதான். இதை முதல் ஒரு வாரம்
கொடுத்து வாருங்கள். இதற்குள் அரிசியானது பாப்பாவுக்கு ஏற்றுக்கொள்கிறதா
என்று கண்டுபிடித்து விடமுடியும். பாப்பாவுக்கு அரிசி ஒவ்வாமை இருந்தாலும்
கண்டுபிடித்துவிடலாம். அரிசியில் ஒவ்வாமை வருவதற்கு வாய்ப்புகள் மிக மிகக்
குறைவு. இந்த விஷயத்தை ஒரு தகவலாக மட்டும்தான் உங்களுக்குச்
சொல்லியிருக்கிறேன். பாப்பாவுக்குப் பச்சரிசி, புழுங்கல் அரிசி,
கைக்குத்தல் அரிசி, பாஸ்மதி அரிசி, சிவப்பு அரிசி என்று எல்லா வகை
அரிசிகளையும் கொடுக்கலாம். ஆனால், முதல் வாரத்தில் ஒரே வகை அரிசியை ஒரு
வேளை மட்டும் அறிமுகப்படுத்துங்கள்