குமுதம் நிருபர் பெ.கணேஷ் குமுதம் இணையதளத்தில் சினிமாவின் எல்லா
டெக்னிக்கல் ரகசியங்களையும் இளைஞர்களுக்குப் புரிகிற எளிய தமிழில்
சினிமாவிற்குப் பின்னால் என்கிற தொடர்
எழுதினார். இதற்கு கிட்டதட்ட
அறுநூறு வாழ்த்து ஈ மெயில்கள். அதிலிருந்தே அது எவ்வளவு உதவிகரமான ஒரு
தொடர் என்பது நிஜமானது. அந்த தொடரே இப்போது நூல் வடிவில் வெளிவந்துள்ளது.
இந்நூலை வாசிக்கிற உங்களில் ஒருவர், நாளைய இயக்குநராக இருப்பீர்கள்.