சாளுக்கிய மன்னர்கள் கி.பி. 6-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவையும் மத்திய இந்தியாவையும் ஆண்டுவந்தனர். சாளுக்கிய மன்னர்களில் தலை சிறந்த அரசராக இரண்டாம் புலிகேசி விளங்கினார். இவர் வாதாபிக்கு அருகில் உள்ள அய்கோல் நகரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்துவந்தார். பல நாட்டு மன்னர்களுடன் போரிட்டு, தனது ஆட்சி எல்லையை விரிவுபடுத்தினார். கட்டிடக் கலை மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார்.சாளுக்கிய மன்னர்கள் அய்ஹோல், வாதாபி போன்ற நகரங்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், அருகில் உள்ள பட்டடக்கல் நகரை மிகப் புனிதமாகக் கருதினர். மன்னர்கள் முடி சூட்டிக்கொள்வதற்காகவே இந்த நகரம் உண்டாக்கப்பட்டிருந்தது.