இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதே உங்களுக்கு இத்துறையில் உள்ள ஆர்வம், உங்கள் கனவு, அனைத்தும் உறுதியாகிறது. ஆக இனி எந்தக் குழப்பமும் இன்றி.. ஜெயித்துக் காட்டத் தயாராகுங்கள்..! இந்தியக் குடியுரிமைப் பணித்துறையின் மீது இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவின் முதுகெலும்பான குடியுரிமைப் பணித்துறையில், தம் சாதனைகளை நிகழ்த்தி, கனவுகளை நனவாக்கும் இளைஞர்களின் முயற்சி, மிகச் சரியான தேர்வு. இந்திய அரசியலில் இளைஞர்களின் நேரடியான ஈடுபாடு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக மிக அவசியம். குடியுரிமைப்பணி (Civil Service) என்பது இந்திய அரசியலில் மிக முக்கியப் பங்கு வகித்து வந்துள்ளது, வருகிறது, வந்துகொண்டே இருக்கும். இந்தியாவில் கி.பி. 150ஆம் ஆண்டுகளில் இருந்தே குடியுரிமைப் பணியின் வேர்கள் ஊன்றப்பட்டு விட்டன!