மனிதர்கள் இப்போது கணிப்பொறிமயமாகவே ஆகிவிட்டார்கள். கணிப்பொறி அறிமுப்படுத்துவதற்கு முன்னர் மக்கள் தகவல் தொடர்புகளுக்காகப் பெரிதும் அஞ்சலகங்களையே சார்ந்திருந்தார்கள் கணிப்பொறிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மக்கள் அஞ்சலகங்களை அணுகுவது குறைந்திருக்கிறது. காகிதங்களின் பயன்பாடுகள் கூட பெருமளவில் குறைந்திருக்கிறது.
தகவல் தொழில் நுட்பச் சட்டம் எதற்காக இயற்றப்பட்டுள்ளத என்றால் ஒருவரின் கணிப்பொறி சிஸ்டத்தில் மற்றவர் நுழைந்து தவறு செய்தலைத் தடுப்பதற்கும் மற்றும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிராக மின்னனுச் சாதனங்களைப் பயன்படுத்தி தவறான தகவலை அளிப்பதைத் தடுப்பதற்குமேயாகும்.
இந்த நூல் சைபர் குற்றம் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்தவற்கான சீரிய சட்ட நூலாகும்.