'எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?' - இதுபோன்ற ஒரு எதிர்மறைக் கருத்தை மையப் படுத்தி எழுதத்தான் வேண்டுமா? என என்னுள் முதலில் ஓர் தயக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள், சுற்றியுள்ள மனிதர்கள், இவர்களைக் கூர்ந்து கவனிக்கையில் எதிர்மறைத் தாக்கத்தின் கொடூரமான விளைவுகள் முகத்தில் அறையும் உண்மையாய், இப்புத்தகத்தை எழுதியே ஆகவேண்டும் என்று தூண்டின.