பந்தி நடந்து கொண்டிருந்தது. பெண்ணும் மாப்பிள்ளையும் பால் பழம் சாப்பிட்டு விட்டார்கள். அமுதா அறையில் இருந்தாள். தோழிகள் "கிள்ளி” விட்டுக் கொண்டிருந்தார்கள். அவள் தக்காளிக் கன்னம் ஆப்பிளாகச் சிவந்து கொண்டிருந்தது. செந்திலை நண்பர்கள் பிடித்துப் போய் விட்டார்கள். அரட்டை! சாப்பிட்ட நண்பர்கள் வந்து சொல்லி விட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். பந்தி பரிமாறுவதை மேற்பார்வையிட்டுக் கொண்டு இருந்தார், முத்துசாமி. “அதுக்குள்ள என்னப்பா மோரைத் தூக்கி விட்டாய். பாயசத்தை எடுத்துக் கொண்டு இன் னொரு சுற்று வா... அங்கே என்ன வேண்டும் என்று கேளு." பொன்னப்பா தேடி வந்தார். "பொண்ணு மாப்பிள்ளையை மறு வீட்டுக்கு அழைத்துப் போக வேண்டும்."