"உன்னைச் சரணடைந்தேன்" கதையுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த கதையின் கரு தோன்றியதில் இருந்தே எங்கள் இருவரின் மனமும் ஊசலாடிக் கொண்டுதான் இருந்தது. எழுதலாமா... வேண்டாமா என்பது மாதிரி. சவாலான இந்த கதையை நீங்கள் ஏற்று கொள்ளும் வகையில் தர, எங்களாலான ஒரு சிறு முயற்சி. இப்பொழுது கூட அன்றாடம் செய்திகளை வாசிக்கையில் இந்த கதையின் நாயகி மயூரிக்கு நடந்தது போன்ற ஏதாவது ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருப்பதைப் படிக்கிறோம். அதுவும் நம் சமுதாயத்தில் அந்த பெண்ணின் உணர்வைக் கூட புரிந்துக் கொள்ளாமல் பரபரப்பு செய்தியாக ஆக்கத்தான் முனைகிறார்கள். திரைப்படங்கள், சமுதாயப் பார்வை... எத்தனையோ பிடிக்காத விஷயங்கள் இந்த நிகழ்வின் அடிப்படையில் நடக்கின்றன.