"ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்" என்ற கருத்து நாளடைவில் மருவி "ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்" என்று தற்பொழுது வழக்கில் இருக்கிறது. ஆனால் அப்படி பொய்யின் அடிப்படையில் நடந்த திருமணம் எப்படி இருவரின் வாழ்க்கையையும் வழி நடத்துகிறது என்பது தான் கதையின் மையம். சீரியஸ் எல்லாம் இல்லை. குறும்பு, கேலி, விவாகம், வாதம், விவாதம்... இத்தனையும் சேர்த்து சுவாரஸ்யமாகவும் அமையும் என்று நினைக்கிறோம்.