தினத்தந்தி இளைஞர் மலரில், ‘சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்’ எனும் தன்னம்பிக்கைத் தொடர் வெளியானபோது அதற்கு வாசகர்கள் கொடுத்த வரவேற்பு பிரமிக்க வைத்தது. தற்கொலையின் விளிம்பிலிருந்தவர்களைக் காப்பாற்றியதாகவும், பிரிந்த உறவுகளைச் சேர்த்ததாகவும், தோல்வியின் கரையிலிருந்தவர்களை உற்சாக மூட்டியதாகவும் கிடைத்த செய்திகள் நேர்மறை எழுத்தின் தேவையை மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதப்படுத்தின. வழக்கமான தன்னம்பிக்கை நூல்களிலிருந்து இந்த நூல். பெருமளவு வேறுபடுகிறது. இந்த நூலிலுள்ள கட்டுரைகள் ஒரு தோழனாக, ஒரு சகோதரனாக நம்மோடு பேசி, நம்மோடு நடந்து நமக்கு வழிகாட்டுகின்றன.