'முத்திரைச் சிறுகதைகள்' அணிவரிசை என்ற தனிச் சிறப்புத் தகுதியோடு இந்தச் சிறுகதைத் தொகுப்பு உங்கள் கைக்கு வருகிறது. 'வெண்பூ மனம்' தொகுப்பின் ஏழு கதைகள் ஆனந்த விகடனில் மட்டும் '' பவளவிழா முத்திரைச் சிறுகதைகள்'' என் அங்கிகாரம் பெற்ற கதைகள். 'குங்குமம்' வார இதழின் முத்திரைச் சிறுகதையாக 'சக ஜீவராசி' ஐந்து குட்டிக்கதைகளை இத்தொகுப்பில் சேர்க்கலாமா வேண்டாமா என்றொரு விவாதம் எனக்குள் திகழ்ந்தது. சிறுகதைக் கூறுகளும் உணர்ச்சி விளைவுகளையும் நிகழ்த்தவல்ல ஹைக்கூச் சிறுகதைகளாக இவை திகழ்வதால், இத்தொகுப்பில் இணைகிற உரிமை பெறுகின்றன என்ற துணிபில் சேர்க்கிறேன்.