நம் பயலுக்கு எப்பதான் மாலை பூக்கப் போகுதோ என்ற நினைவில் சலிப்பு. பெண் கேட்டுப் போகிற இடமெல்லாம் உபசாரம் வரவேற்பு ,விசாரிப்புகள் தடபுடலாக நடக்கின்றன. இந்த வீட்டோடு சம்பந்தம் ஆயிருமோ பயலுக்கு மாலை பூத்துருச்சோ என்ற நம்பிக்கைகள் அரும்புகின்றன. அப்புறம் நாலைந்து நாள் கழித்து தோதுப்படாது என்ற தாக்கல் வந்து தொலைக்கிறது.