உலக அளவில் பெண்களின் சமூக பங்களிப்பை விவரிக்கும் முதல் தமிழ் நூலாக இப்புத்தகம் இருக்கும் என்றே கருதுகிறேன். ஆண்கள் மட்டுமே ஆண்ட பரம்பரையாகவும் பெண்கள் எல்லாம் ஆளப்பட்டவர்களாகவும், ஆண்கள் மட்டுமே அறிவிலியாகவும், ஆண்கள் மட்டுமே அனைத்தையும் அளுமை செய்வதே வரலாறு- பெண்களுக்கு வரலாறே இல்லை என்பதை மிகச் சரியான தரவுகளை முன் வைத்து கட்டுடைக்கிறது இப்புத்தகம். மனித குல வரலாற்றில் ஆணுக்கு நிகராக அல்லது ஆணை விட பெண்கள் பல்வேறு விடயத்தில் முன்னோடிகளாக இருந்ததை வரலாற்று ஆதாரங்களின் துணையோடு எடுத்துரைக்கிறார் இப்புத்தக ஆசிரியர்.