17-ம் நூற்றாண்டில் திண்டுக்கம்-நிலக்கோட்டை பகுதியை ஆட்சிபுரித்தவன், நாகம் கூளப்ப நாயக்கன்.
இவன் மீது, மதுரைக்கு அருகில் உள்ள திருமங்கலம் பகுதியில் பொற்கொல்லர் மரபில் பிறந்த சுப்ரதீபக் கவிராயர் பாடியதே இந்நூன்.
இந்நூலை உரைநடையில் தரவேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்டநாட்களாக உண்டு.
உரைநடையையும், கவிதையையும் ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும்.
விறலி விடு தூதி'லும், கூளப்ப நாயக்கன் காதலி'லூம் முப்பத்தைந்து ஆண்டு காலமாக எனக்கு ஈடுபாடு உண்டு.
'திரை ஒலி' பத்திரிகையில் வேலை பார்க்கும் போதே இதில் பல பகுதிகளை மனப்பாடம் செய்திருக்கிறேன். எனது கவிதை வளத்துக்கு இதுவும் ஒரு வழிகாட்டி.