மொத்தம் 32 அத்தியாயங்கள் அதில் 32 விதமான மனிதர்கள், ஒருவர் மற்றொருவருக்கு சளைத்தவர்கள் அல்ல என்கிற குணாதசியங்கள் உள்ளவர்கள். படிக்க படிக்க சிரிப்பை அடக்கமுடியாமல் சங்கிலித்தொடர் போல செல்லும் நகைச்சுவை. நான் ஸ்டாப் சிரிப்பு மற்றும் சிந்தனைக்கு குண சித்தர்கள் கியாரண்டி.ஒரு புத்தகத்தை திறந்தால் உங்கள் கண்களுக்கு முதலில் தென்படுவது சமர்ப்பணம் அல்லது அவருக்காக இவருக்காக தானே. இங்கே முதலில் தென்படுவது களிகூர்தல் இது என்னடா ஒபெனிங் வித்தியாசமா இருக்கேன்னு உள்ளே சென்றால் அத்தியாயத்தின் தலைப்பு எல்லாம் அதை விட வித்தியாசம்.