புத்தக வாசிப்பு என்றால் என்ன..? என்ற கேள்விக்கு விட்டத்தைப்
பார்த்து யோசிக்கிற இன்றைய இளைய தலைமுறையினர் முகநூல், வாட்ஸப்,
இன்ஸ்ட்டாகிராம், யூடியூப் என முழு நேரமும் தன்னை
அர்ப்பணித்துக்கிடக்கிறார்கள். அவர்கள் கையோடு பிணைக்கப்பட்டிருக்கும்
கைபேசியை எடுத்துவிட்டுத் தரமான புத்தகமொன்றைக் கொடுத்து வாசிப்புப்
பழக்கத்தைத் தொடங்கி வைக்கிற காலத்தில் இருக்கிறோம் என்பதே நூறுசத உண்மை.
அதை முதலில் பெற்றோர்களிடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியதாயிருக்கிறது.