பால்யத்தில் மனம் நோய்மை என்ற சொல்லை முதுமை என்ற சொல்லுடனே பிணைத்துப் பதிந்து வைத்திருந்தது. அன்று சற்றேறக் குறைய அவ்விதமாகத்தான் புலன் நலன்கள் மற்றும் வாழ்முறை அமைந்திருந்தது. அகாலம் என்பது விபத்து அல்லது தற்கொலைகள் என்பதாகவும் பிறகான நாட்களில் இளம்பிராயத்து மற்றும் பருவந்தப்பிய மரணங்கள்.நோய்மையின் காரணிகள் வாழ்முறை கடந்து குறைபாடுகள் சந்ததித் தொற்றுகளாய் உணர்நுதபோது அவை உருவாக்கும் கையறு நிலையே பிறிதான உளவியலை வடிவமைத்தது.