இங்கு பெயரிடப்படாத யாரோ யாரையோ கண்டு கொள்ளவோ, பெயரிட்டுக் கொண்டு
யாரோவாகிப் போன இருவர் மீண்டும் அவரவர்களாகிப் போகவோ, இந்தக் காதலெனும்
ஒற்றையடிப் பாதையில் தங்களை தக்கவைத்துக்கொள்ள ஒரு மன்னிப்பை தயக்கமின்றிக்
கேட்க, நிலம் மாறத் துணிவதற்கு முன் மீண்டும் ஒருமுறை சோதித்துக்கொள்ள
இந்தக் காதலும் காமமும் யாருக்கானது என்று கால்களை கட்டிக் கொண்டு மன்றாட,
சமாதானங்களை ஏற்க மறுத்து மௌனமாகிப் போன இரவுகளை திரும்பிப் பார்க்க
முயன்று / பார்க்க முயலாமல் தோற்று தாழிட்டுக் கொண்ட யாரோ ஒருவருக்கு
தேனின் தூய்மையை சோதித்துப் பார்க்க தினசரி நாள்காட்டித் தாளில் இடப்படும்
தேன் துளிகளின் மொத்தம் இந்த நாவல்..