கனவுகளை எதிர்கொள்வது அத்தனை சுலபமானதல்ல. அவை நம்முள் நிறைந்திருக்கும் நம்மைப்போன்ற மாயங்கள். இந்த நாவலின் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒருவிதத்தில் நானும் நானல்லாதவையும் என்றால் சரியாக இருக்கும்.ஒரு ஓவியத்தின் வழி தொடங்கிய இந்த நாவல் அதன் கதாபாத்திரங்களை என் கனவின் வழி உருவாக்கிக்கொண்டது. அதில் ஒருவரின் நிஜவாழ்வில் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என நினைப்பதும், ஒரு வலைப்பின்னல் போல சுழன்று கதாபாத்திரங்களின் வாழ்க்கை சந்தர்ப்பங்களாக மாறியுள்ளதை நாவலை முடிக்கையில் உணரமுடியும்.