கனாடாவின் தலைசிறந்த நவீன இலக்கிய ஆளுமையான மார்கரெட் அட்வுட் அளவுக்கு பெயரையும் புகழையும் பெற்றிருக்கும் மைக்கேல் ஒண்டாச்சி இலங்கையில் 1943ஆம் ஆண்டு பிறந்தார். அவரது 10 வயது வரை அங்கே வாழ்ந்தார். கவிஞராக வாழ்க்கையைத் தொடங்கி நாவாலாசிரியராக பிரசித்தம் பெற்றவர். மணவாழ்க்கை சரிவர அமையாத பெற்றோர்களால் அவரது வாழ்க்கை நிறைய மனோவியர் தாக்கங்களுக்கு உள்ளாயிற்று. அவரது தந்தை வழியில் அவரது பாரம்பரியம் தமிழர்களுடையதாக இருந்ததாக அவரே தெரிவித்திருக்கிறார். அப்போதைய சிலோனிலிருந்து இங்கிலாந்து சென்று பட்டப்படிப்பு முடித்து சிறிது காலத்தில் கனாடாவில் குடியுரிமை பெற்றார்.