இத்தொகுப்பில் இடம்பிடித்திருக்கும் கவிதைகளின் அடிநாதமாய்க் கடல் இருந்த போதிலும் அவற்றை இப்படி ஒரே இடத்தில் அருகருகே வைப்பதை வாசகர் சிரமமாக நினைக்கலாம். எழுதப்பட்ட அல்லது வெளியீட்டுக் கால வரிசை பின்பற்றப்படவில்லை. அதனால் சில கவிதைகள் வாசகருக்கு அருகாமையிலும் சில கவிதைகள் வாசகருக்கு அருகாமையிலும் சில சேய்மையிலும் இருக்கலாம். எல்லாக் கவிதைகளும் கடல் என்ற ஒற்றைச் சொல்லால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.