நெப்போலியன் ஹில், 1883ம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள விர்ஜீனியா மாநிலத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஹில் தன்னுடைய இளம் வயதிலிருந்தே, ஆன்ட்ரூ கார்னகி, தாமஸ் எடிசன், அலெக்சான்டர் கிரகாம் பெல் போன்ற மாபெரும் சாதனையாளர்களைப் பற்றிக் கற்றறிந்தார். வெற்றி அறிவியலில் குறிப்பிடத்தக்கதொரு சிந்தனையாளராகவும் வல்லுநராகவும் அவர் உருவெடுத்தார்.
மகத்தான சாதனைகளைப் படைத்த ‘சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்’ என்ற புத்தகம் 1937ல் வெளியானது. இது கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுவரை இந்நூல் 7 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. அவர் ஒரு மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும்கூட. அமெரிக்கா நெடுகிலும் பயணம் செய்து வெற்றிக் கொள்கைகள் குறித்து எண்ணற்ற ஊர்களில் பேசி இலட்சக்கணக்கானோரை அவர் ஊக்குவித்துள்ளார். 1962ல் அவர் ‘நெப்போலியன் ஹில் அறக்கட்டளை’யை நிறுவி, தனது கொள்கைகள் என்றென்றும் தழைத்திருக்க வழி வகுத்தார். 1970ல் தனது 87வது வயதில் அவர் காலமானார்.
வெற்றி விதிகள் கோட்பாடுகளை ஆராயும் பணி 1908 ஆம் ஆண்டுவாக்கில் ஆரம்பமாயிற்று. சக்திவாய்ந்த மனிதர்களின் வெற்றி ரகசியங்களை நேரடியாக அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று கார்னகி ஊக்கம் தந்தார். இறுதியாக 1927 ஆம் ஆண்டு அவர் தனது முதல் பதிப்பை வெளியிட்டார்.
வாசிப்பு மற்றும் பிற தனிப்பட்ட திறன்களை இந்தப் புத்தகம் அதிகரிக்கிறது. இந்த பிரிவில் நிச்சயமாக நீங்கள் சிறந்த வாசிப்பை உணர்வீர்கள். இந்த புத்தகங்கள் மனதிற்கு அற்புதமான ஈடுபாடு கொடுக்கிறது. இந்த புத்தகம் உயர்தர பதிப்பில் கிடைக்கிறது.