book

சாபம்

Saabam

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சல்மா
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969588
Add to Cart

"சல்மா எழுதிய 11 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். எழுத்திற்கு ஆண் பெண் பேதமில்லை என்ற போதிலும் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை பெண் ஒருவராலேயே எழுத முடியும் என்பதே உண்மை. கதாப்பாத்திரங்கள் நிறைய மெüனங்களைச் சுமந்து கொஞ்சமாகவே வார்த்தைகளை பிரசவிக்கிறார்கள். பெண்கள் பல துறைகளில் கால் ஊன்றி ஆண்களுக்கு நிகராகப் பரிணமித்தாலும், நடைமுறை வாழ்வில் அவர்கள் மிகுந்த வலியையும் வேதனையையும் சுமப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவற்றை மிக அழுத்தமாகச் சித்திரிக்கும் இக்கதைகளில் பெண்களின் மெüனமும், யாருமற்ற அண்ட வெளியில் அவர்கள் தனிமைப்பட்டு நிற்பதும் வாசிப்பவருக்கு வலியை ஏற்படுத்துகிறது. இதில் முத்தாய்ப்பாக ""வலி' என்ற சிறுகதையில் அவளும் அவனுமே கதைகளை நகர்த்துகின்றனர். அவர்கள் யார்? பெயர் என்ன? என்ற கேள்விகளுக்குள் நம்மை போக விடாமல் அந்த வேதனையை மட்டுமே நம்மை உணரச் செய்கிறார். இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் வெவ்வேறான காலகட்டத்தில் எழுதப்பட்டாலும் அவற்றை ஒருசேர படிக்கும் போது ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன. மனத்தின் மிக நுட்ப போராட்டங்களையும், சிக்கலாகிவிட்ட ஆண்}பெண் உறவின் சுமுகமற்ற புரிதலையும் மிக அனாயாசமாக கடந்து செல்கிறது இச் சிறுகதை தொகுப்பு. இச் சிறுகதை தொகுப்பை படிக்காதவர்களுக்கு, """"இந்தா பிடி(படி) சாபம்'' என்று கையில் கொடுக்கலாம். "