தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்
Thadhri Kuttiyin Smartha Visaram
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூமா. வாசுகி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381343296
Add to Cart "1905-ஆம் ஆண்டில்தானே ஆசார அனுஷ்டானங்களின் அடிப்படையில், கொச்சி ராஜ்யத்தின் நன்னெறி அறிஞர்களான பிராமணர்கள், குரியேடத்து தாத்ரியை ‘ஒழுக்கம் தவறியதன்’ பேரில் விசாரணை செய்தார்கள்.
அந்த ‘ஸ்மார்த்த விசாரம்’ நாற்பது நாட்கள் நீண்டது. விசாரணையின் கடைசியில் குற்றம் சாட்டப்பட்ட ‘சாதனம்’ (கற்புநெறி தவறியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பெண் இந்தப் பாலற்ற பெயரில்தான் அறியப்பட்டாள்) அறுபத்து நான்கு ஆண்களின் பெயர்களை உரத்துச் சொன்னாள். ராஜ நீதி அவர்களையெல்லாம் தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் சாதியிலிருந்து விலக்கியது.
அறுபத்தி ஐந்தாவது ஆணின் பெயரைச் சொல்லாமல் தாத்ரி, அவர் கொடுத்த மோதிரத்தை தன் பணிப் பெண் மூலமாக ஸ்மார்த்தனுக்குக் காட்டினாள். “இந்தப் பெயரையும் சொல்ல வேண்டுமா?”என்று அவள் கேட்டபோது ஸ்மார்த்தனும் மீமாம்சகர்களும் மகாராஜாவுமெல்லாம் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். “போதும், போதும்” என்று விசாரணையை முடித்ததாக வரலாறு. கோட்பாடுகளையும், சமகால மறுமலர்ச்சி இலக்கிய வரலாற்றையும் இத்தொகுதியின் கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன. "