book

அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Agngnaadi

₹1100
எழுத்தாளர் :பூமணி
பதிப்பகம் :க்ரியா பதிப்பகம்
Publisher :Crea Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :1066
பதிப்பு :3
Published on :2014
ISBN :9788192130217
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Add to Cart

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். க்ரியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது. இப்புத்தகத்தின் பதிப்புரிமை பூமணிக்கு உரியது. இந்நாவல் 2014ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது
கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாகக் கூறிக்கொண்டு வாராவாரம் கிளுகிளுப்புக்காக எழுதப்பட்டு வருஷக்கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள் தாம். 'அஞ்ஞாடி... தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல்... பூமணியின் மொழிக்கட்டுப்பாடு: பூமணிக்குள் ஒரு தேர்ந்த எடிட்டரும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் 'சொகமாக'- நாவலில் மீண்டும் மீண்டும் வரும் வார்த்தை இது- நாவலை வாசித்துக் கொண்டே போகலாம். இதுதான் மொழிக்கு, பண்பாட்டுக்கு படைப்பாளியின் கொடை. ஒரு படைப்பாளிக்கான சவாலை எதிர்கொண்டு தமிழில் இருந்துவந்த சமீபத்திய இடைவெளியை முழுமையாக நிரப்பி இந்த நாவல் புதிய சவால்களை விமர்சகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கியிருக்கிறது. .[