book

ரகசியமாய்

Ragasiyamai

₹72₹80 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரஜா
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2002
Add to Cart

ரகசியமாய்... பிரியமானவர்களுக்கு, எனது நாவல் வரிசையில் இது புத்தக வடிவு பெரும் 50வது நூல். உலகத் தமிழர்களுக்கு அதிகம் பரிச்சியமான அருணோதயம் பதிப்பகத்தில் இந்த ரகசியமாய் நாவல் வெளிவருவதில் எனக்கு மகிழ்ச்சியே. தமிழில் இருக்கும் சில நல்ல பதிப்பாளர்களில் அருணோதயம் அருணன் அவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். வாழ்க்கை வசீகரமானது; வசந்தமானது, வெவ்வேறு திருப்பங்களை, வெவ்வேறு தருணங்களில் தன் அழகிய முகங்களோடு வாழ்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த ரகசியமாய் நாவலின் பாத்திரங்களான ஸ்ரீதர், உஷா, சியாமளா, வசந்தா, பர்வதம், சுந்தர வதனம், மாயா, ராகவ் எல்லோரும் என்னுள் கரைந்தவர்கள். உங்கள் மனங்களிலும் அவர்கள் வாசமிகும் வசந்த மலர்களாய் ஏறி உட்கார்ந்து கொள்வார்கள். இந்த நாவலைப் படிப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ கற்றுக் கொள்வார்கள். ரகசியமாய் எழுத என்னைத் தூண்டிய என் சத்குருநாதர் குரு சுராஜானந்தா என்னை என்றும் சூட்சமமாய் இருந்து ஆசிர்வதிக்கிறார் என்ற நம்பிக்கையுடன் நான்!