book

ஐயனார் ஆடு

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாத்தளை சோமு
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789391994334
Add to Cart

வெட்டப்பட்டஆட்டின் உடல் துடித்ததே என்மனக்கண்ணில் மிதந்தது. மனிதன் சுயநலத்திற்காக வாய் பேச முடியாத, மனிதனுக்கு எவ்வழியிலும் தீங்கு செய்யாத, மனிதனை நம்பியே வாழ்கிற இந்த ஆட்டை வெட்டலாமா? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? தன்னோடு அண்டி வாழ்கிற கோழி, ஆடு, மாடு, பன்றி, ஒட்டகம் முதலிய விலங்குகளை மட்டுமே கடவுள் நம்பிக்கையில் பலி கொடுத்துத் தெய்வங்களைக் ‘கும்பிடும்’ இந்தநம்பிக்கை எவ்வாறு வந்தது? விலங்கு, பறவை என்பவையும் மனிதனைப்போல் உயிரினங்கள்தான். அவற்றைத் தன்வசப்படுத்தி மனிதன் என்ற சக்தியாக இருப்பவன்அதனை அழிப்பது சரியா? உயிரைக்கொல்வது, பலி கொடுப்பது சரியாஎன்பது பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்கத் தெரியாத ஒரு சிறுவன், அவனுக்காகநேர்த்தி செய்யப்பட்ட ஓர் ஆட்டோடு கொண்டநட்பு, அது பற்றிய அவனுடையஎண்ணங்களே இந்நாவலாக விரிந்துள்ளது. -நாவலிலிருந்து