book

நல்ல மனம் வேண்டும்

Nalla Manam Vendum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவதி
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

ஒன்பது வயது கமலிக்கு அன்பு இல்லம் தான் வீடு. ஒரு வம்பு, வழக்கு கிடையாது. தன் அன்பால் அனை வரையும் ஈர்த்தாள். ராமானந்தருக்கு வேண்டிய பணி விடைகளை யாரும் சொல்லாமலே செய்தாள். எல்லாக் குழந்தைகளுக்கும் 'கமலிக்கா' ஆனாள். அக்கறையாகப் படித்தாள். அரசாங்க 'ஸ்காலர்ஷிப் ஹாஸ்டல் வசதி புத்தகங்களுடன் கிடைத்தது. பி.காம். முதல் வகுப்பில் தேறி ராமானந்தர் ஐயா மூலம் ஒரு நல்லவரிடம் வேலைக்கு அமர்ந்தாள். மேலே படிக்க ஆசைதான். ஆனால் ஐயாவின் அன்பு இல்ல கணக்கு வழக்குகள் - அவரை மேலும் சிரமப்பட விடக்கூடாதென, தெரிந்ததால் வேலைக்குப் போனாள். 'குணா அண்டு கோ' - கருணாகரன். கருணா சார் மிகவும் நல்லவர். வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். சிறு குடும்பம். ஒரே மகன் - நல்ல மனைவி. மகனும் நன்கு படித்து வெளிநாடு போனான். பத்து வருடங்களாக அவர் நடத்தி வந்த -'வீட்டு தேவைப் பொருள்கள்' கம்பெனி மாடியிலும் - கீழே மாடி வளைவில் ஒரு ஜெராக்ஸ் மிஷின் கடையும் அவளுக்கு தேவையான வருமானத்தைத் தந்தது. மாடி கம்பெனியில் எலக்ட்ரிகல்ஸ், மிக்ஸி, அடுப்பு, கிரைண்டர் என பல செக்ஷன்கள் உண்டு. கணக்குகளும் தனிதான்.