book

இதய வீணை

ithaya veenai

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணியன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :430
பதிப்பு :1
ISBN :9788183796781
Add to Cart

இன்னொரு விதத்திலும் இந்த நாவலுக்கு ஒரு சிறப்பு உண்டு. என்னுடைய திரைப்படமாக எடுக்கப்பட்ட நாவல்களில், இதில் மட்டுமே திரு, எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதற்குப் பிறகு அவர் என்னுடைய ‘உதயம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்புகள் பலவற்றில் நடித்ததுண்டு. ஆனால், இதய வீணை மட்டுமே இந்தப் பெருமைக்கு ஆளாயிற்று! என்னுடைய படைப்புகளுக்கும் ‘இதயம்’ என்ற சொல்லுக்கும் ஒரு உணர்ச்சி பூர்வமான தொடர்பு உண்டு. என்னுடைய பயணக் கட்டுரை வரிசைகளிலும், நான் ஆசிரியராக இருந்து பணியாற்றும் பத்திரிகையிலும் இந்தத் தொடர்பு நேர்ந்திருக்கிறது. என்னுடைய நாவல்களில் ‘இதயத்'தில் கலந்து நிற்பது, முதன் முதலாக அந்தத் தலைப்பைப் பெற்றது, 'இதய வீணை' தான்!