book

வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்

Vaazhvai Valamaakum Nera Nirvaagam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுசி. திருஞானம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2008
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

 பென்சில் என்றால் என்ன? வாழைப்பழம் என்றால் என்ன? என்பதற்கெல்லாம் நம்மால் விளக்கம் கொடுத்து விட முடியும். நேரம்
என்றால் என்ன? எனபதற்கு அவ்வளவு சுலபமாக விளக்கம் கொடுத்து விட முடியாது. பிரபஞ்சத்தைப் போலவே ஆதியும் அந்தமும் இல்லாதது. தங்கத்தைப் போல மதிப்புமிக்கது. இப்படிப்பட்ட சுற்றி  வளைப்பு பதில்களைத் தான் நம்மால் தரமுடிகிறது. இப்படி அரூபமாகவும், புதிராகவும் தோற்றம் அளிக்கும் நேரத்தை நிர்வகிப்பது சாத்தியமா என்ற கேள்வி எழக்கூடும். நேரத்தை நமது வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்கத் தொடங்கினால் நேரத்தைப் பற்றிய புதிர் விடுபட்டு விடும். ஒரு  நாளைக்கு 24 மணி நேரம், ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற கணக்கில் நம் ஒவ்வொரு வருக்கும் சராசரியாக 70 ஆண்டுகள் அல்லது 80 ஆண்டுகள் நேரம் வழங்கப்பட்டுள்ளது.  ஆக, நேரத்தை நிர்வகிப்பது என்பது நமது வாழ்க்கை நேரத்தை நிர்வகிப்பதுதான். சுருங்கச் சொன்னால் அறிவியல் பூர்வமான வாழ்க்கை நிர்வாகமே மிகச் சிறந்த நேர நிர்வாகம். நேர உணர்வை வளர்த்துக் கொள்வதில் சற்றுக் கடுமையுடனும், நேர நிர்வாக உத்திகளைக் கடைப்பிடிப்பதில் நெளிவு சுளிவுடனும் நடந்து கொள்ளப் பழகிவிட்டால் நேரம் உங்களது மிகச் சிறந்த சேவகன் ஆகிவிடும்.
                                                                                                                                           -சுசி. திருஞானம்.