book

அருகர்களின் பாதை

Arugargalin Pathai

₹270.75₹285 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயமோகன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :270
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788184936797
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2017
Add to Cart

ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும்பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறுபேருடன் ஒரு காரில் ஒருமாதகாலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத்தலங்களை தேடித்தேடிச்சென்று பார்த்தார். அந்த அறநிலைகளின் சங்கிலி இன்றும் அப்படியே இருப்பதைக் கண்டறிந்தார். அனேகமாக அத்தனை இடங்களிலும் அவர்கள் சமண அறநிலைகளில் உணவும் உறைவிடமும் பெற்றனர். மிகமிகக்குறைவான செலவில் அப்பயணத்தை நிறைவுசெய்தனர்.

அப்பயணத்தில் ஜெயமோகன் தினமும் பயணக்குறிப்புகளை தன் இணையத்தளத்தில் எழுதினார். பல்லாயிரம் வாசகர்களால் அவை வாசிக்கப்பட்டன. இந்நூல் அக்குறிப்புகளின் தொகுப்பு.