book

துளி விஷம்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆனந்த் ராகவ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789386737014
Add to Cart

எனக்குப் பிடித்த நூறு தமிழ்ச் சிறுகதைகளில் வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ கதைக்கு அடுத்து ஆனந்த் ராகவின் கதையும் உண்டு.” -- இரா. முருகன்

*தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் பத்து வருடங்களாக எழுதிவரும் ஆனந்த் ராகவ் இதுவரை அறுபது சிறுகதைகளும், ஏழு மேடை நாடகங்களும் எழுதியிருக்கிறார்.

இலக்கியச் சிந்தனை அமைப்பின் 2010ம் ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான விருது பெற்றவர். இதைத் தவிர இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரப் பரிசுகள், விகடன் முத்திரைக்கதை பரிசுகள் போன்றவற்றைப் பெற்றிருக்-கிறார். இந்திய ராமாயணங்களோடு தாய்லாந்து மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய ராமாயணங்களை ஒப்பிட்டு எழுதிய ‘ராமகியன்’ என்கிற நூல் இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. தமிழிலும் ஆங்கிலத்திலும் நாடகங்களை எழுதி இயக்குகிறார். இவரது நாடகங்கள் சென்னை, பெங்களூரு, தாய்லாந்து, அமெரிக்கா போன்ற இடங்களில் இதுவரை நாற்பது முறை மேடையேற்றப்பட்டுள்ளன.

ஆனந்த் ராகவின் கதைகள் நேரடியாக வாசகர்களுடன் பேசுபவை. பாசாங்கில்லாத, பூடகமில்லாத அவரது கதாபாத்திரங்களை அன்றாடம் நாம் சந்திக்கலாம். சரளமான விறுவிறுப்பான நடை, இயல்பான நகைச்சுவை ததும்பும் மொழி, சட்டென்று திசை மாறும் முடிவு என்று ஆரம்ப காலத்திலேயே தனக்கென்று ஒரு பிரத்யேக நடையழகை உருவாக்கிக்கொண்டவர்.