book

கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் ஃபிராய்ட்)

Kanavugalin Vilakkam (Sigment Proid)

₹166+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகூர் ரூமி
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :4
Published on :2017
ISBN :9789383067374
Add to Cart

கனவுகள் தோன்றும் நேரம் மூன்று பகுப்புகளாக அமைவதுண்டு.
உறங்கியவுடன் தோன்றக்கூடிய கனவுகள் பெரும்பாலும் கடந்த கால வாழ்க்கை நிகழ்சிகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
நள்ளிரவு நேரத்தில் வரும் கனவு நிகழ்கால வாழ்க்கை அமைப்புகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
விடியற்காலை வரும் கனவு எதிர்காலம் பற்றியவையாக இருக்கும்
பகல் கனவு பலிப்பதில்லை. இனி நமக்கு ஏற்படுகிற கனவுகளுக்கு நமது முன்னோர்களின் வழிகாட்டி சத்திர விதி முறைப்படி என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.
ஒரு பிரம்மாண்டமான ஆலயம் கனவில் வந்தால் கூடிய விரைவில் கடவுள் அருளால் நமக்கு அதிஸ்டம் தரக்கூடிய நிகழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு.
ஆலயத்தின் தலை வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்வது போல கனவு கண்டால் தீவிரமான புது முயற்சி ஒன்றில் ஈடுபட போகிறோம் என்று அர்த்தம்.
ஆலயத்தின் தலை வாசல் கதவு மூடப்பட்டது போன்று கனவு வந்தால் நமது முயற்சி தேக்க நிலை அடைய கூடும். ஆனால் கடவுள் அனுகிரகத்தால் தொல்லைகள் தானாக விலகி விடும்.
பெரிய காண்டாமணி ஓசை எழுப்புவது போல் கனவு வந்தால் நாம் செய்த சில தவறு காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் விலகி விடும். அதே நேரம் திரும்ப அதே தவறை செய்ய கூடாது என்பதற்கு எச்சரிக்கையாகவும் அந்த மணியோசையை நாம் எடுத்துகொள்ள வேண்டும்.
அடர்த்தியான பசும் இலைகளை கனவிலே பார்த்தல் புத்திர பேறு உண்டாவதற்கு வழி ஏற்படும்.

ஒருவர் மேஜைமேல் அமர்ந்து எழுதி கொண்டு இருப்பது போல் கனவிலே பார்த்தால் உங்களுக்கு சாதகமா வழக்கு முடிவுகள் அமையும்.

அல்லது பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவையும் ஏற்படும்.

காவல் நிலையத்தை கனவில் காண நேர்ந்தால் நீங்கள் செய்து கொண்டு இருக்கும் முயற்சி தொடர்பாக சட்ட சிக்கல் ஏதோ ஒரு குழப்பம் ஏற்பட வழி இருக்கிறது என்று அர்த்தம்.

சிறு குழந்தை ஒன்று மலர்கொத்து ஒன்றை உங்களுக்கு பரிசளிப்பது போல் கனவு வந்தால் உங்கள் காதல் எந்த தொந்தரவும் இன்றி திருமணத்தில் முடியும்.
அல்லது காதலியின் பதிலுக்கு காத்திருந்தீர்கள் ஆனால் சாதகமான பதில் கிடைக்கும்