book

பிள்ளை கடத்தல்காரன்

Pillai Kadathalkaran

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. முத்துலிங்கம்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :190
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384641238
Add to Cart

இந்தக் கதையை, ரொறொன்ரோவில் வார்டன் வீதியில் அமைந்துள்ள பல்கடை அங்காடியில் வேலைசெய்யும் சோமாலியக் காவலாளியுடன் ஆரம்பிக்கலாம். வெள்ளைச் சீருடை, தோள்களில் தரித்த கறுப்புப் பட்டைகள், கணுக்காலுக்கு மேல் உயர்ந்த பூட்ஸ், இடுப்பிலே பெல்ட்டில் குத்தியிருக்கும் ரேடியோ... எனக் கம்பீரமாக இருந்தார். சாய்த்து அணிந்திருந்த தொப்பி, பாதிக் கண்களை மறைக்க உலா வந்து, அவ்வப்போது உயரமான ஸ்டூலில் அமர்ந்து தன் கடமையைச் செய்யும் கறாரான காவலாளி அவர். கதையைத் தொடங்க மிகவும் பொருத்தமானவர்.

அல்லது இந்தக் கதை ஓர் அகதியுடன் ஆரம்பமானது எனக்கூடச் சொல்லலாம். அவன் பெயர் லோகநாதன். நேற்று அவனுக்கு 24-வது பிறந்த நாள். அவன் பிறந்த தேதி அவனுக்கு நினைவு இருக்கிறது. அவனைப் பெற்ற அம்மாவுக்கு அந்தத் தேதி ஞாபகத்தில் வந்ததே கிடையாது. கனடாவுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு படுக்கை போட்டால் நிரம்பிவிடும் சின்ன அறையில் தனியாக வசித்தான்.