ஊரும் சேரியும்
Oorum Seriyum
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சித்தலிங்கையா
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384641177
Add to Cartநம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக கல்வி இல்லை. அத்தகு சூழலை உருவாக்க இயலாததற்கான காரணங்களில் வறுமையும் ஒன்று. வறுமைக்கொடுமையோடு சாதிக்கொடுமையும் சேர்ந்துகொள்ளும்போது இயலாமையும் ஆற்றாமையும் இன்னும் தீவிரமடைகின்றன. வறுமைக்கான காரணத்தையும் சாதிக்கான காரணத்தையும் என்னவென்றே அறியாத ஓர் இளம்நெஞ்சம் இக்கொடுமைகளிடையே உழல நேரும்போது படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. மிகச்சாதாரணமாக் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்கூட இந்த இரண்டு காரணங்களால் சின்னஞ்சிறுவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய கொடுமை. இத்தகு சூழலில் அங்குலம் அங்குலமாக நகர்த்தும் எதிர்ப்புகளை விவேகமுடன் எதிர்கொண்டும் முன்னேறிய வாழ்க்கைப்பயணத்தின் அனுபவங்களை சித்தலிங்கையாவின் சுயசரிதை முன்வைக்கிறது. எந்த இடத்திலும் அரற்றல் இல்லை. ஆவேசம் இல்லை. தன்னிரக்கமும் இல்லை.இது இந்த நூலின் மிகப் பெரிய பலம். ஒவ்வொரு பகுதியிலும் தெளிவு இருக்கிறது. குறும்பும் சிறுநகையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இழைபோடுகின்றன. தன்னம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு அனுபவத்தையும் கலைத்தன்மையோடு முன்வைக்கும் ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலே இச்சுயசரிதையை மிகமுக்கியமான நூலாகக் கருதவைக்கிறது. -பாவண்ணன்