book

இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள்

Isthanbul Oru Nagarathin Ninaivugal

₹475+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொண்டபல்லி கோடேஸ்வரம்மா
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :423
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384641030
Add to Cart

இஸ்தான்புல் - ஒரு நகரத்தின் நினைவுகள்  - ஓரான் பாமுக் :

தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூறும் இந்நூல் பாமுக் தனது இளமைப் பருவத்தை திரும்பிப் பார்க்கிறார். இளமைப்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூறுகிறார். தனது நகரம் மாறியதையும் நகரத்தோடு தானும் மாறியதையும் நுட்பமாகச் செல்லிச் செல்கிறார். ஓவியமாக விரும்பி எழுத்தாளனாக மாறிய பாமுக் இஸ்தான்புல் நகரத்தைத் தனது எழுத்துமூலம் அசாதாரணமாக அருங்காட்சியமாக மாற்றுகிறார். ஒரு நகரத்தின் கதை என்ற நிலையிலேயே ஓரான் பாமுக்கின் படைப்பாற்றல்மூலம் இஸ்தான்புல் ஒரு பண்பாட்டின் மையமாகவும் மாற்றங்களின் திருப்புமுனையாகவும் மனிதர்களின் கதைக்கனமாகவும் வரலாற்றின் சின்னமாகவும் மாறுகிறது. தனது நகரமான இஸ்தான்புல்லைப் பற்றிச் சொல்லும்போது அவர் பெருமிதம் கொள்கிறார். நெகிழ்கிறார். தன்னுடைய கற்பனைத்திறனுக்குச் செழுமையூட்டிய இஸ்தான்புல்லை ஓரான் பாமுக் நினைவுகூரும் விதம் மிக இயல்பானது. அதே சமயம் மிகமிக அசாதாரணமானது.