book

யதார்த்த சினிமாவின் முகம்

Sinimavin Munru Mukangkal

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிராபியென் ப்ளாக்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381975282
Add to Cart

மிகவும் குறைந்த செலவில் தமது படங்களை அமைத்துக் கொள்ளல், இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பேச வேண்டி இருந்த அரசியலை தமது படங்களில் உள்ளடக்குதல், வெறும் ஸ்டூடியோவுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பிரஞ்சு சினிமாவை கடற்கரை கிராமப்புரங்கள், பாடசாலைகள் போன்ற நிஜ வாழ்க்கையின் அமைவிடங்களில் காட்சிப்படுத்தல் என பிரஞ்சு சினிமாவிற்கு ‘புதிய அலை இயக்குனர்கள்’ வித்திட்டவை ஏராளம். இன்று வரை பிரஞ்சு சினிமா தனித்துவமாக விளங்குவதற்கு இவர்களே முக்கிய காரணமாக இருந்தனர்.

யதார்த்தத்தை யாதார்த்தமாக காட்ட முனைதலுக்கான ஒரு உதாரணமாக ப்ரான்ஸ்வா த்ரூஃபோவின் ‘The 400 Blows’ படத்தை குறிப்பிடலாம். இத்திரைப்படத்தில் வரும் பாடசாலைக்காட்சிகள், உண்மையான பாடசாலையொன்றில் இருக்கும் மாணவர்களை வைத்து காட்சிப்படுத்தப்பட்டது. அதில் அந்த்யோனும் ஆசிரியரும் மட்டுமே நடிகர்கள்.