book

மந்த்ராலய மகான்

Sri Manthralaya Maghan

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருக்கோவிலூர் சிவசக்தி
பதிப்பகம் :சபரீஷ் பாரதி
Publisher :Sabarish Bharathi
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

சாதுக்களைக் காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் யுகம் தோறும் நான் அவதரிக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அருளியுள்ளார். அதன்படி அவரது பிரதிநிதியாக எண்ணற்ற மகான்கள் இந்த பாரத மண்ணில் தோன்றினார்கள். நிலையில்லா இவ்வுலக வாழ்க்கையில் மக்களின் அன்றாட இன்னல்களுக்கு அருமருந்தளித்து இம்மையையும் பயனுடையதாகச் செய்து மறுமைக்கும் வழிகாட்டினார்கள். இது ஒரு தெய்வீகத் தொடர்கதையாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த மகான்களின் வரிசையில் தோன்றி மந்த்ராலயத்தில் பிருந்தாவன வாசியாய் இன்றும் தன்னை சேவிக்க வரும் பக்தர்களுக்கு அருளாசியை வழங்கிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள். முற்பிறவிகளில் பக்திக்கு இலக்கணம் வகுத்த பிரகலாதனாகவும், அடுத்து ஸ்ரீ வியாஸராஜ மகானாகவும் தோன்றி ராஜவம்சத்தை காப்பாற்றியவரும் இவரே. தாம் உயர்ந்த நிலையில் இருந்துகொண்டு தம்மையண்டிவரும் பக்தர்களை உயர்விக்கும் குரு. ஸ்ரீ ராகவேந்திரர் என்று சொன்னால் அது மிகையாகாது.