book

உன்னை விரும்பினேன் உயிரே

Unnai Virumbinen Uyire

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மகேஸ்வரி
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

மலைகளின் ராணியான அழகான ஊட்டி!

 டிசம்பர் மாதத்து குளிரால்... பச்சைப் போர்வையை இழுத்து மேனியெங்கும்  போர்த்திருந்தும்... கடுங்குளிர் வாட்டி வதைக்க... மாப்பிள்ளையின் வரவுக்காய் காத்திருக்கும் பெண் வீட்டார்போல... பனியில் குளித்து.... ஆர்வமாய்... வழிமேல் விழிவைத்து... சூரியனின் வருகைக்காய்... காத்திருந்த...  அழகான இளம் காலைப் பொழுது!

அழகான கௌதம் விழித்து எழுந்தான்.

மாநிறம். ஆறடிக்கு மேலான நெடுநெடு உயரம். காந்தமாய் கவரும் அழகான கண்கள். எந்த நேரமும் புன்னகைத் தவழும் உதடுகள், உதட்டுக்கு மேலே அடர்த்தியான கருகரு மீசை கூடுதல் வசீகரம்.

எதிரில் வரும் எந்தப் பெண்ணையும் அசர அடிக்கும் அழகு!  எவருமே திரும்பித் திரும்பிப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடாமல் போகமாட்டார்கள்.