book

என் பிள்ளைத் தமிழ்

En Pillaith Tamil

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு.மேத்தா
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :3
Published on :2011
ISBN :9788183450287
Out of Stock
Add to Alert List

கவிதா தேவியைச் சின்னஞ்சிறு வயதிலேயே காதலித்தவன் நான். பள்ளிக்கூடத்துப் பையனாய் இருந்தபோதே எனக்கும் அந்தப் பருவ மோகினிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. நான்காம் வகுப்புப் படிக்கிற நாட்களிலேயே என் இதயத்தில் அவளுக்கொரு நாட்டிய சாலை அமைத்துக் கொடுத்தேன். அவள் ஆடினாள்... இல்லை... இல்லை... என்னை ஆட்டுவித்தாள்! அன்று முதல் இன்று வரை அந்த இளையவளின் அசைவே என் இதயத் துடிப்பாயிற்று. வாழ்க்கையின் போர்க்களத்தில் நான் ஆயுதம் ஏந்தவில்லை. காகிதம் ஏந்தினேன். காலம் செல்லச் செல்லக் காகிதமே என் ஆயுதமானது.