book

எங்கள் ஊர்

Enkal Oor

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.வா.ஜ
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Jeneral Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :188
பதிப்பு :2
Published on :2012
Add to Cart

யாருக்குத்தான் தங்கள் சொந்த ஊர் என்றால் மனத்தில் இன்பக் கிளுகிளுப்பு எழாது? அந்த ஊரில் சில காலமே வாழ்ந்தாலும், இளம் பருவ நினைவு உருக்கொள்ள அரங்கமாக உதவுவதால் அதன் காட்சிகள் பசுமையாக உள்ளத்தில் பதிந்திருக்கும். 'இளம் பருவக் கனவுகளுக்கும், விளையாட்டுக்கும் தொட்டிலாக இருந்தது எங்கள் ஊர்' என்ற எண்ணத்தில் உண்டாகும் அநுபவம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் அதைப்பற்றிப் பிறருக்குச் சொல்லவோ, எழுதவோ எல்லோருக்கும் இயலுவதில்லை. ஒவ்வொரு விட்டால் சொல்லி சொல்லும் சிலருக்கு மதிப்பு உண்டாகாதே! புதிய கட்டுரை வரிசை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் விஞ்சியபோது ‘எங்கள் ஊர்' என்ற தலைப்புத் தோற்றியது. அந்த வரிசையில் மகாகனம் வ.ச. முதலில் ஸ்ரீநிவாச சாஸ்திரியாரை எழுதக் கேட்டுக் கொண்டோம். அந்தப் பெரியார் எழுத ஒப்புக்கொண்டார்கள். ஆங்கிலத்தில் மகா மேதையாகிய அவர், தமிழில் எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் என்று வாசகர்கள் வியந்து பாராட்டினார்கள். பின்பு ஸ்ரீமதி குமுதினி எழுதினார். ராவ்சாஹிப் வெ.ப. சுப்பிரமணிய முதலியார், ஸ்ரீ அ. ஸ்ரீனிவாச ராகவன், ஸ்ரீ சுத்தானந்த பாரதியார், ஸ்ரீ கொனஷ்டை ஆகியவர்களைக் கேட்டுக்கொண்டோம். அவர்களும் எழுதினார்கள். இந்த வரிசையைப் படித்துப் பார்த்து இன்புற்ற வாசகர்களில் சிலர் தங்கள் ஊரைப்பற்றியும் எழுதினார்கள். இவை 1932 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி 1944 - ஆம் ஆண்டு டிசம்பர் முடிய அவ்வப்போது வந்தன. ஒரு மாமாங்கத்துக்கு ஆகிவிட்டது. இப்போது இந்தக் கட்டுரைகளை ஒரு சேரப் பார்க்கும் போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை உடையதாக இருக்கிறது. இந்தக் கட்டுரைகளை எழுதிய பெரியவர்கள் இப்போது நம்மிடையே இல்லை. அவர்களுடைய சொந்த ஊர்களை எண்ணியபோது அவர்கள் உள்ளத்தே தோற்றிய தோற்றங்களைக் காட்டும் கட்டுரைகளைப் படிப்பவர்கள் அவர்களை நினைக்க இந்தப் புத்தகம் உதவும்.