book

தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம்

Dhanushkodi Ramasamy Ilakiya Thadam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. காமராசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :164
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123411811
Add to Cart

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் மரணம் பற்றிக் குறிப்பிடுகையில் "தோழர் தனுஷ்கோடி ராமசாமியின் மரணம் நம்மையெல்லாம் உலுக்கிவிட்டது. மரணம் பொதுவானுதான்.  எல்லாரையும் வரவேற்பதுதான் - முதுமையும் இழிமையையும் ஒதுக்கி மண்ணை மேலும் மேலும் மெருகேற்றுவதுதான் - வளப்பதுட்டுவது புதுமைப்படுதுதவதுதான். ஆனால் அது தவறுதலாக இளமையும் வசீகரமும், விலைமதிப்பில்லாத படைப்பாற்றலும் கொண்ட மனிதர்களை அவர்கள் பொங்கிப்பூக்கும் நேரத்தில் இரண்டாக ஒடித்துப்போடும் போது நாமும் ஒடிந்துபோகிறோம்" என்று எழுதியுள்ள வரிகள் படிப்பவர் நெஞ்சை உருக்கிப் பிழிந்தெடுத்துவிடுகிறது.

இதுபோல் ஒவ்வொரு கட்டுரையாளர்களும் சொற்களால் தனுஷ்கோடி ராமசாமி அவர்களை ஓவியமாகத் தீட்டுகின்றார்கள். அவருடைய படைப்புகளைக் காவியமாக்கிக் காட்டுகிறார்கள்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை படைப்பாளர் இரா. காமராசு அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார்.  வாழும் காலத்தில் எப்படி வாழவேண்டும்?  எப்படிப்பட்ட படைப்புகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும்?  என்பதற்கு தனுஷ்கோடியின் வாழ்க்கையும் படைப்புகளும் எடுத்துக்காட்டாகும்.