book

கமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள்

Commercial Art Katrukolungal

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரவிராஜ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :152
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788123402741
Out of Stock
Add to Alert List

'கமர்ஷியல் ஆர்ட்' தனியாகப் பயில இந்தப் புத்தகம் ஒரு அருமையான கையேடு மற்றும் வழிகாட்டி.   ஒரு பயனுள்ள புத்தகம் எழுதிய திரு. ரவிராஜ் அவர்களை முதற்கண் உளமாரப் பாராட்டுகிறேன்.

இதில் ஒரு பொது ஓவியர் சிறந்த கமர்சியல் ஆர்டிஸ்ட் ஆகக் கற்றுத்தேர்வதற்கு எல்லாவிதமான நுணுக்கங்களையும் ஆசிரியர் திரு. ரவிராஜ் அவர்கள் அளித்திருக்கிறார்.  கோடுகள், வடிவங்கள், நிறங்கள் மற்றும் ஒளியும் நிழலும் ஆகியவற்றின் விளைவுகளைப் பற்றியும் விஸ்தாரமாக்க் கூறப்பட்டுள்ளது.  படம் வரைவதிலும் பல நுணுக்கங்கள் இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதால் இந்த கையேட்டை உபயோகப்படுத்துபவர்கள் ஒரு பிராக்டிகல் நடைமுறைப் பெற்றவர்களாகிறார்கள்.

படங்கள் வரைவதற்காக நுணுக்கங்கள் கொடுக்கப்படுள்ளன.  பல மேல்நாடுகளில் மாதிரி கையேடுகள்   ஏராளமாக வந்துள்ளன.  ஆனால் தமிழில் இம்மாதிரியான புத்தகங்கள் குறைவு.  அந்தக் குறையை ஓவிய இயக்குனர் திரு. ரவிராஜ் அவர்கள் நிவர்த்தி செய்திருக்கிறார்.  

இந்தப் புத்தகம் ஓவிய கல்லூரிகளிலும் பாடப்புத்தகமாக வைக்க அருகதை உள்ளது.