book

வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

Veril Palutha Pala

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. சமுத்திரம்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :185
பதிப்பு :6
Published on :2015
ISBN :9788188048885
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Out of Stock
Add to Alert List

கதைதான் ஒரு எழுத்தாளனை கவிழ்ந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பேர் வாய்ந்த எழுத்தாளராக இருந்தாலும், சீர் வாய்ந்த கதையாக இல்லாவிட்டால், ஒரு எழுத்து தன்னை எழுந்து நடக்கவிட்ட எழுத்தாளனுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது. சு. சமுத்திரம் போன்ற சில எழுத்தாளர்கள், மக்களின் மனி மண்டபங்களில் மகுடாதிபதிகளாக இருப்பதற்குக் காரணம், அவர்களின் எழுத்து மனிதனைத் தொடுகிறது. தொட்டு அவனைத் தூக்குகிறது என்பதுதான். அவரது மைக்கூட்டிற்குள் நீலம் பூத்து நிமிருகிறபோது, மண்ணுக்காகக் குரல் கொடுக்கிற அவரது மகத்துவம்தான் 'தாள் மேடைகளில்' தளிர்நடை போடுகிறது. எழுத்து வேள்வித்தீயில் எழுந்திடும் நீலப்பூவாக இருக்கிறவர் சு. சமுத்திரம் அவர்கள்.

நான் விரும்பி அடைந்த நண்பர்களில் அவர் முதல் வரிசை மனிதர். ஒரு கவிஞனுக்குரிய வெள்ளை மனமும், வேகப் பிளிறலும், ஒரு சமுதாய விஞ்ஞானிக்கு வாய்க்க வேண்டிய அடங்காத சினமும், ஆழமான அணுகலும், பாரம் சுமக்கிற மக்களுக்காகத் தனது எழுதுகோலைப் பகிர்ந்து கொள்கிற பக்குவமும், நீண்ட நாள் நிலைத்திருக்கப்போகிற தீர்க்க தரிசனமும் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் அடையாளங்களாகும்.

அவரது எழுத்துகளும் வாழ்க்கைக்கும் பெரிதான இடைவெளி ஒன்றும் இல்லை. கனமான நாவல்களுக்காகக் காலம் அவரைக் கௌரவப்படுத்துவம்.

நுரைக்கிற சமுத்திரத்தின் நூதனமான கதை இது!