book

படைப்பின் குரல்

Padaippin Kural

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உ. அலிபாவா
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788188048656
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

ஒவ்வொரு எழுத்தாளனும் தனது படைப்பினில் தனது இதயக்குரலைப் பதிவு செய்கிறான். தனக்குள் இருக்கும் தர்ம ஆவேசத்தை வெளிப்படுத்துகிறான். மூக்கின் அருகே ஒரு நறுமண மலரைப் பிடித்துக்கொண்டு ' அழகான பூ' என்று மென்மையாகச் சொல்லும்போது அந்த மலர் மேன்மை அடைகிறது. அதற்கு மாறாக எச்சில் வெளியில் வரும்படி 'ப்பூ' என்று சொன்னால் அந்த மலர் அருவருப்பாகிவிடுகிறது. அதேபோல் படைப்பாளனில் குரல் வாழ்வைத் தெளிவுபடுத்தும் வண்ணம் அமையவேண்டும். 'பூ' என்ற சொல்லை இதழ்கள் குவித்து உச்சரிக்கும்போது அதில் ஒரு மலர்தல் இருக்கிறது. அதைப்போல் படைப்புகள் உள்ளங்களை மலரச் செய்யவேண்டும். 'ப்பூ' என்று இதழ்கள் பிளந்து இழித்துச் சொல்வதைப்போல் படைப்புகள். கொச்சைத் தனமாக இருந்தால் படிப்பவர் மனங்கள் விரிதல் அடைவதற்குப் பதிலாக விரிசல் அடையும்.

 

முழுமையான உடையணிந்த ஒரு பாடகி பாடல் ஒலிப்பதிவு அரங்கில் பாடும்போது அதில் ஒரு ரசனை ஏற்படுகிறது. அதே பாடலுக்கு அரைகுறை ஆபாச உடை அணிந்து காட்டுத்தனமாகப் பெண்கள் ஆடும்போது இளம் உள்ளங்களில் கிளர்ச்சி ஏற்படுகிறது. எழுத்துலகமும் திரையுலகமும் ' நீ மனிதன், உன்னிடம் இருக்கவேண்டியது நேயம்' என்று எப்போதும் மனிதனை மனிதனுக்கு அடையாளம் காட்டிக்கொண்டேயிருக்க வேண்டுமே தவிர வன்முறைக்கும் வரம்பு மீறிப் போவதற்கும் தூண்டிக்கொண்டிருக்ககூடாது. அந்த வகையில் ' படைப்பின்குரல்' என்னும் இந்நூலில் தமிழுலகத்தின் தரத்தை உயர்த்திக் காட்டிய உன்னதப் படைப்பாளர்களின் குரல்களைப் பதிவு செய்து நனிசிறந்த சிந்தனைகளைத் தூண்டுகிறார் விரிவுரையாளரும் நூலாசிரியருமான முனைவர் உ. அலிபாவா அவர்கள்.