book

நவீன அறிவியல் உலகம்

Naveena Ariviyal Ulagam

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தஞ்சை.இரா. இந்து
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :97
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788188046072
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

அறிவியல் உலகம் அதிவேகமாக முன்னேறி வருகிறது. நியூயார்க் நகரில் இருந்துகொண்டு பிரான்சிலிருக்கும் ரோபோவை கம்ப்யூட்டர் மூலம் இயக்கி 54 நமிட அறுவைசிகிச்சையை ஒரு டாக்டர் குழு வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது என்ற பத்திரிகைச் செய்தி எல்லோரையும் இன்னொரு நாட்டில் இருப்பவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்யும் முறை எவ்வளவு விசேஷமானது! அந்த நோயாளி அனுமதித்தாரா என்பது வியப்பாக உள்ளது. நாடு விட்டு நாடு அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கு அறிவியல் பயன்பாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்க ஹோட்டல் ஒன்றில் ரோபோக்கள் குடும்பமாகக்கூட வாழும் காலம் வந்து விடுமோ என்று நினைக்கும் அளவில் அவை மனித செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்கின்றன.

 மொழிபெயர்க்கும் மோடம், நடமாடும், ரேடியோ, பேசும் கைக்கடிகாரங்கள் ஆகியவை இந்த உலகை மிகவும் நவீனமாக்கிக் கொண்டுவருகின்றன. இது தவிர இன்னும் எத்தனையோ வகையான கண்டுபிடிப்புகளின் பயன்பாடுகளை எளிமையாகத் தொகுத்துள்ளார்கள்.

 இந்நூலைப் படித்தறிவதன் மூலம் பொது அறிவு சம்பத்தமாகப் பொது இடங்களிலோ தேர்வுகளிலோ கேட்கும் கேள்விகளுக்கு எளிதாக விளக்கமளிக்க இயலும். எனவே இந்நூல் ஒரு பயனுள்ள நூல் என்பதால் எமது அறிவுப் பதிப்பகம் இதனை வெளியிட்டு வாசகர்களின் ஆதரவை எதிர்பாக்கிறது.