book

ஏட்டிக்குப் போட்டி

Etikku Potti

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :13
Published on :2010
Add to Cart

1928 பிப்ரவரியில், “ஆனந்த விகடன்” பத்திரிகை எஸ்.எஸ். வாசன் நிர்வாகத்தில் வெளிவரத் தொடங்கியது. பாரதியாரின் நண்பரான பரலி.சு. நெல்லையப்பர், கல்கியை வாசனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி, “இவர் நவசக்தியில் பணிபுரிகிறார். எழுத்தாற்றல் மிக்கவர். இவருடைய எழுத்துக்கள் விகடனுக்கு மிகவும் பொருந்தும்” என்றார். கல்கியை, ஒரு கட்டுரை எழுதி அனுப்பும்படி வாசன் கேட்டுக்கொண்டார். “ஏட்டிக்குப்போட்டி” என்ற நகைச்சுவை கட்டுரையை “கல்கி” எழுதி அனுப்பினார். வரிக்கு வரி நகைச்சுவை இழைந்தோட எழுதப்பட்டிருந்த அக்கட்டுரையைப் படித்து, விழுந்து விழுந்து சிரித்தார், வாசன். தன் தாயாருக்கும் படித்துக்காட்டினார். அவர் ரசித்து மகிழ்ந்தார்.