book

கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை

Kalpana Chawala

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. லெனின்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :160
பதிப்பு :5
Published on :2013
ISBN :9789382577034
Add to Cart

பெண் குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளுக்குள்ளே புதைந்து கிடக்கும் ஆற்றல்களைக் கண்டுபிடித்து, அதை அவர்களுக்கு உணர்த்தி, தடைகளைத் தகர்த்து உயர அவர்களை ஊக்குவிக்க இந்த நூல் உதவும். கல்பனா சாவ்லாவின் சாதனைக் கதையைப் படித்தால் சாதனைக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மேலே மேலே ஏறி வானத்தைத் தொடும் தெளிவு ஆண், பெண் இருவருக்குமே பிறக்கும். உங்கள் இந்த லட்சியத்திற்குக் குறுக்கே சூரியனே வழி மறித்து நின்றாலும் அதையே சுட்டு விடும் பலமும் தைரியமும் உங்களிடம் பிறக்கும்.அமெரிக்காவிலுள்ள அத்தனை கோடிக் குடிமக்களிலிருந்து விண்வெளிப் பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே சாதிக்கக் கூடியதைச் சாதித்துக் காட்டியவர்.தந்தை சாவ்லாவின் போர்க் குணத்தைத் தானும் பெற்றவர். பெண் குழந்தையென்று அடக்கி வைக்கப்படாமல் தட்டிக் கொடுத்துத் தாயாரினால் வளர்க்கப்பட்டவர். இந்தியப் பெண்கள் என்றாலே உலகம் கேலியாகப் பார்த்த நேரத்தில் தன் தகுதியால் விண்ணுக்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா. மண்ணிலிருந்து விண்ணிற்கு... விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை (தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நூல்)