வெந்து தணிந்தது காடு
₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டுக்கோட்டை பிரபாகர்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789394265097
Add to Cartபட்டுக்கோட்டை பிரபாகருக்கென்று தனி வாசகர் வட்டம் உண்டு. துப்பறியும் நாவலாகட்டும் பல்சுவை நாவலாகட்டும் எதிலும் தன் எழுத்து நடையால் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கொடுத்து வாசகர்களை ஈர்க்கக் கூடியவர். அப்படிப்பட்ட ஒரு நாவல்தான் இந்த வெந்து தணிந்தது காடு நாவலும். தன் பண ஆசைக்காக ஒரு கிராமத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவனுக்கும், வன அதிகாரியாக வந்து அந்த கிராம மக்களுக்கு நன்மை செய்யத் துடிக்கும் ஒரு இளைஞனுக்கும் இடையே நடக்கும் போட்டிதான் இந்த நாவலின் கதை. உயிரைப் பணயம் வைத்து செம்மரம் வெட்டும் அப்பாவி ஆட்களை விடுவிக்கவும், மாஃபியா கும்பல்போல் செயல்படும் செம்மரக் கடத்தல் கும்பலை சிக்கவைக்க வன அதிகாரி எடுக்கும் முயற்சிகளையும் தனக்கேயுரிய எழுத்து நடையில் விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். அவள் விகடனில் தொடராக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது இந்த நாவல். இப்போது புத்தகமாக வந்திருக்கிறது. இனி, வெந்து தணியும் காட்டில் உலாவலாம்!